காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகாஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

February 14, 2018 279Views
காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஓட்டலில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஓட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சென்னையை சேர்ந்த 
கழிவு நீர் சுத்திகரிப்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முருகேசன் மற்றும் அஜீத் ஈடுபட்டனர்.

மேலும்  ஓட்டல்  ஊழியரான ரவி என்பவரும் அவர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக விஷவாயு கசிந்ததில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த  2 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர் ஆகிய 3 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு  உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உயிரிழந்த 3 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.