விவசாய தோட்டத்தில் புகுந்த புலி.. அச்சத்தில் கிராம மக்கள்...

share on:
Classic

தாளவாடி அருகே மெட்டல்வாடி  கிராமத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்துள்ள புலியை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மெட்டல்வாடி கிராமத்தில் விவசாயிகள் வாழை, கரும்பு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் விவசாய தோட்டத்தில் இருந்து ஏதோ உறுமல் சத்தம் வந்ததை அடுத்து, விவசாயிகள் சென்று பார்த்தனர். அங்கு புலி இருப்பதைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்தனர். இது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய நிலத்தில் உள்ள புலி குடியிருப்புக்குள் வர வாய்ப்புள்ளதால் வனத்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth