18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வரும் வியானன்று தீர்ப்பு

Classic

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (14-6-18) காலை  தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியே கடிதம் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து, ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்தாண்டு, 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நாளை காலை 10:30 மணியளவில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

News Counter: 
100

aravindh