அரிய வகை கேலபாகோஸ் ஆமைகளை கடத்த முயற்சி

share on:
Classic

சட்டத்திற்கு புறம்பாக கடத்த முயன்ற அரிய வகை கேலபாகோஸ் (Galapagos) ஆமைகள், ஈக்வடாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு ஏப்ரலில், ஈக்வடார் - பெரு எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் 27 கேலபாகோஸ் வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சட்டத்திற்கு புறம்பாக இந்த ஆமைகளை கடத்த முயன்ற கொள்ளைக்கும்பல் சிறையில் அடைக்கப்பட்டது. இந்நிலையில், பெரு வனவிலங்கு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 27 ஆமைகளும் ஈக்வடாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravindh