ட்ரம்ப்-கிம் இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது !

Classic

சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் திட்டமிட்டபடி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா பல்வேறு கட்ட அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இந்த சோதனை பல்வேறு நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. இதற்கு  ஐ.நா சபையில் அமெரிக்கா கடும் கண்டனங்களை எழுப்பியிருந்தன. அதுமட்டுமின்றி, ஐ.நாவும் கண்டனம் தெரிவித்து வந்தன. 

இந்நிலையில், தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. இதையடுத்து, பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறுவது உறுதியானது. இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. 
இந்நிலையில், சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில்  வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.  அப்போது, இரு தலைவர்களும் கை குலுக்கி கொண்டனர்.

News Counter: 
100

Parkavi