close
முகப்பு"இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்"

"இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்"

"இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்"

வரும் 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, வரும் 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், இதற்கான திட்டம் கடந்த 5 ஆண்டுகளாகவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள ஆட்கொல்லி நோய்களில் காசநோய் முக்கியமான ஒன்று என்றும் தெரிவித்த அவர்,  2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் கட்டாயமாக காசநோய் ஒழிக்கப்படும் என, தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.