அமெரிக்கா - சீனா இடையே தீவிரமடைந்த வர்த்தக போர்

Classic

இறக்குமதியாகும் சீன பொருட்களின் மீது 14 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வர்த்தகப் போரில் சீனாவின் செயல்பாடு விரும்பத்தகாத வகையில் இருப்பதாகவும், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பது வருத்தத்தை அளிப்பதாகவும் கூறினார். மேலும், அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்கள் மீது 10 சதவிகிதம் வரி விதித்திருப்பதாகவும், சீனா வரம்பு மீறி செயல்பட்டால் கூடுதலாக இன்னும் 14லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி கட்டணம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம், மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 25 சதவிகிதம் அளவிற்கு வரி விதித்து டிரம்ப்  பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போதைய கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என சீனா அறிவித்துள்ளதால் வர்த்தகப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravindh