ஊபர் ஓட்டுநரின் செயலால் காரில் இருந்து குதித்த இளம் பெண் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube Uber-driver-arrested-for-molesting-women- passenger-in-delhi |Auraiya,car,gang rape,woman,பாலியல் வன்கொடுமை,ஓடும் கார்,இளம் பெண்
close
முகப்புஊபர் ஓட்டுநரின் செயலால் காரில் இருந்து குதித்த இளம் பெண்

ஊபர் ஓட்டுநரின் செயலால் காரில் இருந்து குதித்த இளம் பெண்

ஊபர் ஓட்டுநரின் செயலால் காரில் இருந்து குதித்த இளம் பெண்

டெல்லியில் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஊபர் கேப் ஓட்டுநரிடம் இருந்து போராடி தப்பித்துள்ளார் ஒரு இளம் பெண்.

25 வயதான ஊபர் கேப் ஓட்டுநர் தன் வாகனத்தில் தனியாக வந்த இளம் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சம்பந்தப்பட்ட பெண் காரில் இருந்து குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளார். 

காரில் ஏறியவுடனே ஓட்டுநரின் செயல் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. பிறகு, பெண் குறிப்பிட்ட வழியில் செல்லாமல் , ஆளில்லாத வழியில் சென்றுள்ளார் ஊபர் ஓட்டுநர். உடனடியாக காரில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளார் அந்தப் பெண். ஓட்டுநர், காரின் ”செண்ட்ரல் லாக் சிஸ்டத்தை” உபயோகித்து கதவுகளை பூட்டியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாத இளம் பெண் ஓட்டுநருடன் சண்டையிட்டு சமாளித்து காரை விட்டு வெளியே குதித்துள்ளார். மேலும், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த ஊபர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.