மிகவும் சக்திவாய்ந்த சர்ச்களுக்கு ஒரு விசிட் போலாம் வாங்க !

share on:
Classic

கிறிஸ்தவர்களின் புனிததலமாக தேவாலயம் கருதப்படுகின்றது. இந்தியாவில் உள்ள மிக முக்கிய தேவாலயங்களையும் அதன் சிறப்புகளையும் இங்கு காணலாம். 

தூய பவுல் தேவாலயம் :  

திருநெல்வேலி மாவட்டம், மேல இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது. 1903, டிசம்பர் 28-ல் கட்டப்பட்டது. ஆரம்பக்காலத்தில் இது சிறிய ஆலயமாக இருந்தது. பின்பு இவ்வூர் கிறித்தவ மக்களினால் 2005-ம் ஆண்டு ஆலயக் கோபுரப் பணி ஆரம்பிக்கப்பட்டு, 2007 மே 20-ம் நாள் ஆலயக் கோபுரம் பிரதிஸ்டை செய்யப்பட்டது. கோபுரத்தின் நீளம் : 50.4 மீட்டர் (165 அடி)  அகலம் : 10.3 மீட்டர்  ( 34 அடி) . 

இந்த ஆலயத்தின் உட்புறக் கோபுர உச்சியில், உள்புறமாக ராட்சத மணிக்கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்த மணி ஆராதனைக்கு முன்னதாக அறிவிப்பிற்காக இரண்டு முறை மணி அடிக்கப்படும். மற்றும் தினந்தோறும் காலை 4.30, இரவு 7.30 மணிக்கும் மணி ஒலிக்கப்படும். அது மட்டும்மல்லாமல் ஊரில் தீ விபத்து மற்றும் ஆபத்து, அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக ஆலயமணி ஒலிக்கப்படுகிறது. 

சென்னை சாந்தோம் பேராலயம்: 

சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ளது. இது 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893-ம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

சி.எஸ்.ஐ புதின மேரி தேவாலயம் : 

மிகப்பழமையான தேவாலயமாக கருதப்படும் இது 1680 -ம் ஆண்டு ஆங்கிலேயர்கலால் கட்டப்பட்டது. வாணிபம் செய்ய வந்த ஆயங்கியேர்களால் அப்பொழுதே அழகிய கட்டடிமாக விளங்கியது இந்த தேவாலம். மிகவும் அழசிய சிற்ப வேலைபாடுகளால் கலைநயத்துடன் கட்டப்பட்டு பெருமையுடன் விளங்குகிறது.

ஆர்மேனியன் தேவாலயம் : 

 இந்த தேவாலயம் சென்னை பாரி முனையில்  300 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. 1712-ல் ரஷ்யாவின் ஆர்மேனியர்களை சென்னையில் வணிகம் செய்ய வந்த போது கட்டப்பட்டது. 

செயின்ட் தாமஸ் ஆலயம்: 

சென்னை பரங்கிமலையில் உள்ள 500 ஆண்டுகளுக்கும் மிக பழமையான தேவாலயம். 1523 -ம் ஆண்டு வந்த போர்ச்சுக்கீசியர்களால் கட்டப்பட்டது.

News Counter: 
100
Loading...

sankaravadivu