வாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை

Classic

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் சேர்க்கப்பட்டார். சிறுநீரகத் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர். 

பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரது நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். இதனிடையே, அவரது உடல்நலம் தேறியுள்ளதாகவும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

News Counter: 
100

Parkavi