கர்நாடகாவில் காதலர் தினத்திற்கு ஆதரவாக ஆடுகளுக்கு கல்யாணம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகர்நாடகாவில் காதலர் தினத்திற்கு ஆதரவாக ஆடுகளுக்கு கல்யாணம்

கர்நாடகாவில் காதலர் தினத்திற்கு ஆதரவாக ஆடுகளுக்கு கல்யாணம்

கர்நாடகாவில் காதலர் தினத்திற்கு ஆதரவாக ஆடுகளுக்கு கல்யாணம்

காதலர் தினத்தையொட்டி கர்நாடகாவில் உள்ள ரக்‌ஷணா வேதிக்கே ( KRV) என்ற அமைப்பு  செம்மறி ஆட்டிற்கும், வெள்ளாட்டிற்கும் இடையே திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

ஆடுகளுக்கு மாலை அணிவித்து , மஞ்சள் பூசி திருமணம் செய்து வைத்தனர். மத்திய அரசு காதலர் தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கன்னட ஆர்வலர் வட்டால் நாகராஜ் வலியுறுத்தினார். காதலிப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் எனவும் அவர் கூறினார்.  காதலில் ஜாதி , மதம் பார்க்கப்படுவதில்லை என்பதால் காதலர் தினத்தை புறக்கணிக்க கூடாது என்றார்.

மேலும், காதல் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை பரிசளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். காதலர் தினத்தை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் எழுந்துள்ளது. இதனிடையே வட்டாலின் இந்த கோரிக்கைகள் நெட்டீசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.