டிஜிட்டல்  இந்தியா திட்டம் மூலம் பயனடையும் கிராமப்புற மக்கள் - பிரதமர் மோடி பெருமிதம்

share on:
Classic

டிஜிட்டல் - இந்தியா திட்டத்தின் மூலம் கிராமப்புற பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் டிஜிட்டல்-இந்தியா திட்ட பயனாளிகளிடம் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த உரையாடலில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பயனாளிகள் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடினர். அப்போது பேசிய மோடி, டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், டிஜிட்டல் - இந்தியா திட்டத்தின் மூலம் கிராமப்புற பொதுமக்கள் அதிக அளவில் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகத்தின் மயிலாடுதுறையை சேர்ந்த பயனாளிகளிடம் பேசிய பிரதமர் மோடி, முதலில் தமிழில் வணக்கம் தெரிவித்தார். இதனையடுத்து டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும், எத்தனை பேர் பணி செய்கின்றனர் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

 

News Point One: 
டிஜிட்டல்  இந்தியா திட்டம் மூலம் பயனடையும் கிராமப்புற மக்கள்
News Point Two: 
பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்
News Point Three: 
டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார்
News Counter: 
100
Loading...

aravindh