சர்வதேச கிரிக்கெட் - விராட் கோலி தொடர்ந்து முதலிடம் 

share on:
Classic

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம், 73-வது இடத்தில் இருந்த இளம் வீரர் ப்ரித்வி ஷா 60-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல், ரிஷாப் பந்த் 111-வது இடத்தில் இருந்து 62-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2-வது டெஸ்டில் அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் உமேஷ் யாதவ் 29-வது இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu