சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கப்போகும் விராட் கோலி

share on:
Classic

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடிக்க காத்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு 0 என இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து, இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடிக்க காத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில், 39 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 573 ரன்கள் அடித்து சச்சின் முதல் இடத்தில் இருக்கிறார்.

அதற்கு அடுத்த இடத்தில் 27 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 387 ரன்களுடன் கோலி இருக்கிறார்.

சச்சினின் சாதனையை கோலி முறியடிக்க இன்னும் 186 ரன்களே தேவை என்பதால் விரைவில் இந்த சாதனை நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

sasikanth