தமிழக காவல் துறைக்கு விஷால் பாராட்டு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புதமிழக காவல் துறைக்கு விஷால் பாராட்டு

தமிழக காவல் துறைக்கு விஷால் பாராட்டு

February 07, 2018 200Views
தமிழக காவல் துறைக்கு விஷால் பாராட்டு

ஒரே நாளில் சுமார் 60 க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த தமிழக காவல் துறைக்கு நடிகர் விஷால் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல ரவுடியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரவுடிகள்  ஒன்று திரளப்போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் நேற்று இரவு சுமார் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்று  திரண்டபோது,   60-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 

இந்த நிகழ்வு அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் விஷால்,காவலர்களின் இந்த செயல் மிகவும் வரவேற்கதக்கது மற்றும் பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கமிஷ்னர் ஏ.கே விஷ்வனந்தா மற்றும் டிசிபி சர்வேஷ் இருவருக்கும் தங்களின் சிறந்த பணிக்காக தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.