ரூ. 1.5 கோடியை விஜய் சேதுபதிக்கு விட்டுக்கொடுத்த விஷால்

share on:
Classic

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘96’. இப்படத்தின் வெளியீட்டில் தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷாலால் பிரச்சனை ஏற்பட்டது. 96 படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் விஷாலின் துப்பறிவாளன் படத்தை வாங்கி வெளியிட்டார் அதில் அவர் விஷாலுக்கு ரூ. 4.5 கோடி கடன் வைத்துள்ளார், அதை திரும்பதராமல் 96 படத்தை வெளியிட கூடாது என தடைவிதித்த விஷாலுக்கு விஜய் சேதுபதி ரூ. 1.5 கோடியை வழங்கி மேலும் நந்தகோபாலின் கடனுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் கூறி படத்தை வெளியிட செய்திருந்தார். 

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலின் இந்த கந்துவட்டி நடவடிக்கை கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஷால், விஜய் சேதுபதி கொடுத்த ரூ. 1.5 கோடியை திரும்பக்கொடுத்து தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம் என கூறியுள்ளார். பட வெளியீட்டுக்கு உதவ வேண்டிய தலைவர் அப்போது பிரச்சனை செய்து உதவாமல் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் விட்டுக்கொடுப்பது சரியா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் நான்கைந்து மாதங்களில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வரவிருப்பதால் தன் பெயருக்கு எந்த ஒரு கெடுதலும் வந்துவிட கூடாது என்பதற்காக விட்டு கொடுத்திருப்பார் விஷால் என்ற சலசலப்பும் கோலிவுட் வட்டாரத்தில் உள்ளது.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu