ஃபிளிப்கார்ட்டை வாங்கியது வால்மார்ட்

Classic

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் விலை கொடுத்து அமெரிக்க சில்லரை வர்த்தக ஜாம்பவான் நிறுவனமான வால்மார்ட் வாங்கியுள்ளது. 

இந்திய இணையதள வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, இத்தகவலை இரு நிறுவனமும் உறுதிப்படுத்திய நிலையில் பேரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பேரம் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாகவும், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் விலை கொடுத்து வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வால்மார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபிளிப்கார்ட்டின் 77 சதவிகிதம் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
287

Parkavi