80 அடியை நெருங்கியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

Classic

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியுள்ளதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகள் வேமாக நிரம்பி வருகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரிவரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக,  அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியுள்ளது.  

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே அளவில் நீடித்தால் அடுத்த ஒருசில நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 புள்ளி 45 அடியாகவும் அணையில் நீர் இருப்பு 41 புள்ளி 41 டி.எம்.சியாகவும் உள்ளது.

News Counter: 
100
Loading...

aravindh