விராட் கோலியின் கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை - தியானா எடுல்ஜி மறுப்பு 

share on:
Classic

வெளிநாட்டில் விளையாடும் போது, தொடர் நிறைவடையும் வரை மனைவியுடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற விராட் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என அதன் நிர்வாகிகள் குழுவில் ஒருவரான தியானா எடுல்ஜி தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு மண்ணில் விளையாடும் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி அல்லது காதலியுடன் 2 வாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பிசிசிஐ அண்மையில் புதிய விதிமுறையை கொண்டுவந்தது. தொடர் முடியும் வரை மனைவியுடன் தங்க சம்மதிக்க வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு கோரிக்கை தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாக குழுவில் ஒருவரான தியானா எடுல்ஜி, கோலியின் கோரிக்கை குறித்து முழுமையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், இறுதி முடிவுக்கு இன்னும் நேரம் வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், இது பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் தவறானது என்றும் அவர் கூறினார்.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu