வாட்ஸ் ஆப்: ஃபார்வேர்ட் மெசேஜ் என சுட்டிக்காட்டும் புதிய அம்சம்

Classic

வாட்ஸ் ஆப் செயலியில் இனி ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்பினால் சுட்டிக்காட்டும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் பல ஃபார்வேர்ட் மெசெஜ் வருவது வழக்கமாகிவிட்டது. எது உண்மையான தகவல் , எது ஃபார்வேர்ட் என தெரியாமல் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கும் இந்த வாட்ஸ் ஆப் ஃபார்வேட் மெசேஜ் காரணமாக அமைகிறது. இதனையடுத்து, தற்போது புதிய அம்சம் வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-மெயிலை ஃபார்வேர்ட் செய்தால் , பெறுநருக்கு ஃபார்வேர்ட் செய்த தகவல் என சுட்டிக்காட்டுவது போல இனி வாட்ஸ் ஆப்பிலும் காண்பிக்கும சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு கைப்பேசிகளுக்கு மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100

Parkavi