திருமணமாகி 42 ஆண்டுகளுக்குப் பிறகு 63 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண்

share on:
Woman, 63Age, WOman
Classic

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 63 வயது பெண் ஒருவருக்கு 42 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதி செந்தமிழ்ச்செல்வி (63), கிருஷ்ணன் (72). இவர்களுக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பேறு இல்லாதது அவர்களுக்கு மிகவும் மன வேதனை அளித்துள்ளது. இதனால் இந்த தம்பதியினர் பல்வேறு கோவில், குளம், மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் பழநியில் உள்ள பாலாஜி செயற்கை கருத்தரிப்பு மையத்தில் செந்தமிழ்ச்செல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 3.5கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.

இந்த வயதில் குழந்தை பெற்றாலும் இளமையான தாயை போலேவெ உணர்வதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாவும்  தாய் செந்தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய மருத்துவர் செந்தாமரைச்செல்வி , இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வயதில் குழுந்தை பெறுவதால் ஏற்படும் உடல்ரீதியான சிரமங்கள் குறித்தும் மகப்பேறு காலத்தில் கவனிக்கவேண்டியவை குறித்து அவர்களிடம் கூறிய பிறகே செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையை இந்த தம்பதிக்கு பரிந்துரைத்ததாக தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

aravindh