தமிழகத்தில் மகளிர் கிரிக்கெட்: கோப்பையை அறிமுகம் 

share on:
Classic

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்தியன் வங்கி உடன் இணைந்து மகளிருக்கான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 15-ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழகத்தில் மகளிர் கிரிக்கெட்டை வளர்க்கும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்தியன் வங்கி உடன் இணைந்து மகளிருக்கான இந்தியன் வங்கி கோப்பை தொடரை நடத்த உள்ளது. இதற்கான கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி மகளிர் தொடருக்கான கோப்பையை அறிமுகப்படுத்தி வைத்தார். மகளிருக்கென ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடத்தப்பட உள்ளன. 

யெல்லோ சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், வொயிட் வாரீயர்ஸ், ப்ளூ அவென்ஜர்ஸ், உள்ளிட்ட 6அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது வரும் ஜூன் 15ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sankaravadivu