அசத்தல் விலையில் அசத்தும் Mi Band 3.. இது வாட்சா? மினி போனா?

Classic

முன்னனி நிறுவனமான சியோமியின் மை பேண்டு 3 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, Mi பேன்ட் 3 மாடலில் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதனால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அல்லது எஸ்எம்எஸ் மெசேஜ்களில் அதிக எழுத்துக்களை டிஸ்ப்ளே செய்யும். முந்தைய Mi பேன்ட் 2 சாதனத்தில் 0.42 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. 

புதிய Mi பேன்ட் சாதனத்தில் 5ATM வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீருக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்திலும் பேன்ட் பயன்படுத்த முடியும்.

 புதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் வழங்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. 

 

மேலும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி, நடைபயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்த ரியல்-டைம் டேட்டாவை MI Fit ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். முன்பக்கம் பட்டன் புதிய பேன்ட்-லும் வழங்கப்பட்டு இருககிறது. 


சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:

  • 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே
  • கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
  • போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)
  • இதய துடிப்பு சென்சார்
  • உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
  • செடன்ட்டரி ரிமைன்டர்
  • 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
  • 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
  • ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
  • 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி

சியோமி Mi பேன்ட் 3 சாதனம் 20 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் 110 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

கைபேசி அழைப்புகள், SMSகள் முதலியவற்றின் notifications mi bandல் தெரிவிக்கப்படுகிறது

சியோமி Mi பேன்ட் 3 பிளாக் ரிஸ்ட் பேன்ட் உடன் வருகிறது. 

இந்தியாவில் Miபேன்ட் 3 விலை ரூ.1,999

News Counter: 
100

sasikanth