கோரக்நாத் கோவிலில் யோகி ஆதித்யநாத் சிறப்பு வழிபாடு

share on:
Classic

வட மாநிலங்களில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். நேற்று  கோரக்நாத் கோவிலுக்குச் சென்ற யோகி ஆதித்யநாத் சிறுமிகளைக் கொண்டு கன்னியாபூஜை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடு முழுவதும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நவராத்திரிய விழா 9 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தகரா விழா நடைபெற்றது. மைதானத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அகமதாபாத்திலும் ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைத்து வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் ராவணன், கும்ப கர்ணன், மேக்நாத் ஆகியோரின் உருவ பொம்மைகளுக்கு தீ வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில்  இளம் பெண்களும், இளைஞர்களும் ஒன்றாக இணைந்து,  பாரம்பரிய  உடையில் கர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர். 

 திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாளான நேற்று இரவு முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து அம்மன் கலைமகள் திருக்கோலத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று இரவு 12 மணியளவில் நடைபெற உள்ளதால், இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள்  குலசேகரன்பட்டினத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக  ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

sankaravadivu