கடக ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்க காத்திருக்கிறது ஐப்பசி மாதம்

share on:
Classic

கடக ராசி: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும் காலம் இது.  திருமணமாகி குழந்தை இல்லாத சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அதனால் மரியாதை கிடைக்கும். குடும்பத்துடன் பல்வேறு உறவினர் வீட்டு  விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் பண உதவி கிடைக்கும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். தொழிலில் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். அலுவலக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும். சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதனால் தொழிலில் உங்கள் திறமைகள் பளீச்சிடும்.

வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு  எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும் . மாணவர்கள் பட்டங்களும் விருதுகளும் பெறக் கூடிய  வாய்ப்பு உண்டாகும். அரசால் விருது பெறும் அங்கீகாரமும் சிலருக்கு கிடைக்கும். தொழில் சம்பந்தமாக பல்வேறு பயணங்களை மேற்கொள்வீர்கள்.மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதனால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

News Counter: 
100
Loading...

janani