ஏன் கணபதி ஹோமம் செய்ய வேண்டும்?

share on:
Classic

கடவுள்களில் முழு முதற்கடவுள் என்று பூஜிக்கப்படுகிற கணபதியை ஆராதிக்கும் வகையில் கணபதி ஹோமம் நடத்தப்படுகின்றது. விநாயகர் பிரச்சனைகளை களையும் கடவுளாக கருதப்படுகிறார்.

உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் தாங்கள் எந்த செயலை செய்யத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கிய பிறகுதான் அந்த செயலை தொடங்குவது பழக்கம். இதனால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்பது திடமான நம்பிக்கை.

கணபதி ஹோமத்தில் முதலில் அனுக்ஞை  செய்து தொடங்கப்படுகிறது. அப்படி என்றால் பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது என்று அர்த்தம். குடும்பத்துடன் சேர்த்து தனக்கு எல்லாத் தடைகளும் நீக்குவதின் மூலம் நினைத்த எண்ணம் நிறைவேறும் பொருட்டு மகாகணபதி ஹோமம் செய்வதற்கு எனக்கு தகுதி தரும்படியாக அனுக்கிரகம் செய்ய பிரார்த்திக்கிறேன் என்று தொடங்க வேண்டும்.

இதற்குப் பிறகு அர்ச்சர்களின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். அதில் முதலில் ஹோமத்தைச் செய்பவர் தன் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என எல்லார் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு சொல்லி ஹோமத்தைச் செய்யும் தகுதியை தனக்கு வழங்க அனுமதி பெற வேண்டும்.

தர்ப்பைகளை காலுக்குக் கீழ் வைத்துக்கொண்டு, விரலிடுக்குகளில் தர்ப்பையை மோதிரமாக அணிந்து மனைவியோடு அமர்ந்து மந்திரங்களை சொல்லி மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொண்டு விநாயகரை பூஜிக்க வேண்டும்.

வாழ்வின் அனைத்து புது முயற்சிகளுக்கும், கல்வியில் சிறந்து விளங்கவும், திருமண முயற்சிகள் வெற்றியடையவும் விநாயகரை போற்றுவது நல்லது. யார் யாருக்கு கேது தசை நடக்கிறதோ, அவர்கள் அனைவரும் மஹாகணபதி ஹோமம் செய்தால் நல்லது நடக்கும்.

இந்த கணபதி ஹோமத்தை வருடம் ஒரு முறை செய்தால் வாழ்வில் வளமும், நலமும் பெருகி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஒவ்வொரு மாதமும் தாங்கள் பிறந்த நட்சத்திரத்தில் கணபதி ஹோமம் செய்தால் வாழ்க்கையில் தடைகள் அனைத்தும் நீங்கும்.

News Counter: 
100
Loading...

janani