உங்கள் பொறுமைக்கான சோதனைக்காலம் இது.. மிதுன ராசியை எச்சரிக்கும் ஐப்பசி...

share on:
Classic

மிதுன ராசி: மிருகசீரிஷம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம்

இந்த மாதத்தில் சிலர் புதிய வீடு, புதய நிலம் மற்றும் வாகனங்களை வாங்குவார்கள். குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சுக்கிரன் வளமாக இருப்பதால் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு வெகு நாட்களாக எதிர்பார்த்து இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சூரியன் 5-ல் இருப்பதால் பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள். போதுமானவரை குழந்தைகளை அனுசரித்துச் செல்வது உங்களுக்கு நல்லது.

செரிமான பிரச்சனை இந்த காலத்தில் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த படியே ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

பொறுமையாக இருக்கவும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசினால் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.மாதம் முழுவதும் சுக்கிரன், இரண்டாவது வாரத்திலிருந்து புதன் ஆகியோர் மட்டுமே நன்மைகளைத் தருவார்கள். குருவின் 9-ம் இடத்துப் பார்வை மிகவும் சாதகமாக உள்ளதால் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும்.பல்வேறு கோவில் திருத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்கள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்வார்கள். உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். எந்த செயல் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

News Counter: 
100
Loading...

janani