சோலோவாக உலகை சுற்றிப்பார்க்க ஆசையா? அப்போ இது உங்களுக்கு உதவும்...

share on:
Classic

லைஃப் ரொம்ப போர் அடிக்குதுனு ரொம்ப அதிருப்தி மன நிலையில இருக்கவங்களா நீங்க? அப்போ கண்டிப்பா எதாவது ஒரு டூர்-க்கு போகனும்னு ஆசை இருக்கும். அதிலும், தனியாக சுற்றுலா செல்லும் போது ஒரு தனி அலாதியான இன்பம்தான்.

சோலோவாக ஒரு இன்பச்சுற்றுலாவை அனுபவிக்கவும், சில லட்ச செலவுகளுக்குள் என்றால் அதைவிட வேற என்ன நிறைவு என எண்ணுவர்களுக்கான  சில சிறந்த இடங்களைக் காணலாம்...

1) காத்மண்டு: 

நேபாள நாட்டின் தலைநகராக உள்ள காத்மண்டு டெர்க்கிங் மேற்கொள்ள சிறந்த பகுதி. மிகவும் ஏதுவான ஒரு பயணமாக இருக்கும். 5,184 மீ உள்ள பேஸ் கேம்ப்-ஐ சென்றடைவதற்குள் த்ரில்லிங்கான, அமைதியான சூழலியலை இங்கு பெற முடியும். சுமார் 15 நாட்கள் பயணம் செய்ய விமான சேவை, விடுதி என அனைத்திற்கும் ஆகும் செலவு ரூ.90,000.

2) செர்பியா: 

கஷ்டங்கள், மன வலிகள் என அனைத்து நெகடிவிட்டிகளையும் பாசிடிவ் வைப்ஸ் ஆக மாற்றுகிறது செர்பியாவில் உள்ள பள்ளத்தாக்குகளும், மலைகளும். வெறும் 3-4 நாட்களில் செல்லக்கூடிய ஒரு குட்டி ட்ரிப்-க்கு செர்பியா உகந்ததே.

3) ஜோர்டான்:

அரபு நாடுகளின் ஒன்றான ஜோர்டானின் டெட் சீ, பெட்ரா போன்ற இடங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இது சுற்றுலாவுக்கான இடம் மட்டுமல்ல தனிமையை உணர வைக்கும், வாழ வைக்கும். வாழ்வை அளிக்கும். இப்படி கவிகளின் பாணியில் அடிக்கிக்கொண்டே போகலாம். அரபும் ஐரோப்பாவின் வாழ்வியலை கலந்தது.

4) உகாண்டா: 

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு அங்கம் உகாண்டா. பல நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளதால் வன உயிரினங்களுக்கும், வைல்ட் லைஃப்-க்கும் பஞ்சமில்லாத நாடு.  செஸ் தீவுகள், கம்பாலா,  பல தேசிய பூங்காக்களும் கிசிஸி நீர் வீழ்ச்சி போன்றவை பிரதானமாக பார்க்கக் கூடிய இடங்கள். தோராயமாக ஆகும் செலவு ரூ.2 லட்சத்திற்குள் இருக்கும்.

News Counter: 
100
Loading...

janani