கணவன் மனைவிக்குள்ள பிரச்னையா? அப்டினா இந்த ஐப்பசி மாதம் கைகொடுக்கும்...

share on:
Classic

ரிஷப ராசி: கிருத்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதம்

தொழில் மற்றும்  வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வந்த லாபத்தில் மேலும் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.தங்களுடைய எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் இந்த மாதத்தில் நீங்கும்.கலைஞர்களுக்கு வருடங்களாய் எதிர்பார்த்து இருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

பெரிய பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதிகாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களுடைய படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். ஐப்பசி மாதம் முழுவதும் சூரியன், குரு, ராகு ஆகியோர் நன்மையை கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருப்பதால் மனம் நிம்மதியடையும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி அடைவீர்கள்.

நண்பர்கள் வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் பல்வேறு விஷயங்களில் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு வெகு நாட்களாக எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் கிட்டும். பணிபுரியும் பெண்கள் தங்கள் திறமையை நிரூபிக்க புதிய பொறுப்புகள் கிடைக்கும். சில நேரங்களில் உறவினர்கள் வகையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். பொறுமையுடன் இருக்கவும். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நீங்கி அந்யோன்யம் அதிகரிக்கும்.

News Counter: 
100
Loading...

janani