சென்னையில் உள்ள பழங்கால நூலகங்கள் ஒரு பார்வை..

Classic

வாழ்வியலை அனுபவிக்க முக்கிய கோளாகவும் ஒரு பெரும் ஆயுதமாக அமைவது புத்தகம். புத்தகத்தை படிக்க மட்டும் செய்யாமல் அதன் எழுத்துகளோடு வாழ்வது என்பது அவ்வளவு பெரிய இன்பத்தையும் உணர்வையும் ஊடுருவலையும் அளிக்கக் கூடியது. அமைதியான சூழலில் ஒரு புத்தகத்தை படித்தல் என்பது வரம்.

அந்த மாதிரியான வரம் சென்னை போன்ற பிசி நகரங்களில் கிடைக்காமல் போவது அதிருப்தியே. ஆகையால் புத்தக பிரியர்களுக்காகவே சென்னையில் உள்ள பல நூலகங்களின் பட்டியலை காண்க...

1) கன்னிமாரா நூலகம்:

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்குள் உள்ளது கன்னிமாரா நூலகம். நாட்டில் உள்ள அனைத்து பழமையான புத்தகங்களும் இங்கு கிடைக்கும். 1890 களில் நிறுவப்பட்ட இந்த நூலகம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் சிறப்பு குறித்து சென்னை என கூறப்படும் மெட்ராஸில் காலம் காலமாக வசிப்பவர்களிடம் கேட்டால் கதை கதையாக கூறுவர். தேசிய நூலகங்களில் இதுவும் அடங்கும். 

2) ஹிக்கின்பாதம்ஸ்:

மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம் 1844ல் நிறுவப்பட்டது. புத்தக பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் இது பொது அறிவையும் அரசியலையும் வளர்த்துக்கொள்வதற்கான ஆதிக்கமாக விளங்கியது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநரால் இந்த ஹிக்கின்பாதம்ஸ் நூலகம் தென்னிந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது சென்னையின் அண்ணாசாலையின் லேண்ட் மார்க்காக உள்ளது.

3) அடையாறு நூலகம்/தியோசோஃபிகல் சோசைட்டி:

சென்னையில் பெசன்ட் நகருக்கும் அடையாறுக்கும் இடையில் உள்ளது இந்த தியோசோஃபிகல் கார்டன். இது வெறும் தோட்டமாக மட்டுமில்லாமல் ஒரு நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அறியக் கிடைக்காத 20,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 

4) மூர் மார்கெட்:

19ம் நூற்றாண்டில் இறுதி காலகட்டத்தில் சென்னையின் பிராட்வேயின் அருகாமையில் அமைக்கப்பட்டதுதான் மூர் மார்கெட். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அனைத்து வகையான புத்தகங்கள் எல்லாம் இரண்டாம் தர விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்றளவும் இங்கு குறைந்த விலையிலேயே புத்தகங்கள் விற்கப்பட்டும் வாடகைக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ளது.

5) அண்ணா நூற்றாண்டு நூலகம்: 

ஆசியாவின் மிகப்பேரிய பொது நூலகம் என்றால் அது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளன. நூற்றுக்கணக்கான வாசிப்பாளர்கள் அமர்ந்து புத்தகங்களை படிக்கும் வகையில் இங்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

janani