அலுங்காம குலுங்காம ஸ்மூத்தா ஒரு பயணம்.. டெக்கான் ஒடிசி ஸ்பெஷல்...

share on:
Classic

இந்தியன் ரயில்வேயின் ஒரு சேவையாக விளங்குகிறது மகாராஜா டெக்கான் ஒடிசி.

இது அதி நவீன சொகுசு வசதியுடன் இயங்கக் கூடியது. மத்திய ரயில்வே துறையும் மகாராஷ்டிர அரசும் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் இந்த சொகுசு ரயில். இந்த ரயிலில் 40க்கும் மேற்பட்ட டீலக்ஸ் வசதி கொண்ட இருக்கைகள், 2 ஹை க்ளாஸ் ரெஸ்டாரண்ட், பார், ஸ்பா, ஜிம், மசாஜ் செண்டர், பார்லர் என 10 பெட்டிகளை கொண்டது.

நூலகங்கள், 24 மணிநேரமும் இலவச வைஃபை, எல்.இ.டி. டிவி, ஏசி வசதி, வர்த்தகம் மற்றும் வியாபாரத்துக்காக கான்ஃப்ரன்ஸ் ரூம், ஸ்டார் ஹோட்டல் அளவுக்கு வசதிகள் கொண்ட தனித்தனி படுக்கை அறைகள் என தூள் கிளப்புகிறது இந்த டெக்கான் ஒடிசி.

டீலக்ஸ் வசதிகொண்ட படுக்கை அறைகள்: 

8 நாட்கள் மற்றும் 7 இரவுகளை வரை இந்த மகாராஜா டெக்கான் ஒடிசியில் பயணம் செய்யலாம். 8 வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

டெல்லியின் ரந்தம்பூரில் இருந்து தொடங்கி, ஆக்ரா, ஜெய்ப்பூர், உதய்பூர், வதோதரா, அவுரங்கபாத், மும்பை வரை சொகுசு பயணம் முடிவடைகிறது. ஒவ்வொரு ரயில் நிலையங்களின் நிறுத்தத்தின் போதும், அந்த ஊர்களின் பாரம்பரிய நடனத்தின் மூலம் வரவேற்பு, அந்தந்த ஊரின் பிரபல உணவுகள், பொருட்கள் என சகல வசதிகளும் வழங்கப்படுகிறது. 

நவீன மகாராஜா டெக்கான் ஒடிசி ரயில் பயணிக்க ஆகும் கட்டண விவரங்களை கீழ்கண்டவற்றுள் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்...

மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்ள:

News Counter: 
100
Loading...

janani