பாஞ்சாலிக்கு 5 கணவர்கள், எனக்கு 15 கணவர்கள் - அதிர வைத்த அமலாபால்....!

share on:
Classic

அமலாபாலின் ஆடை படம் 19-ம் தேதி ரிலீஸ்

அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இந்தப் படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ரத்னகுமார் இயக்கியுள்ளார்.  பிரதீப் இசையமைக்க, விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்வாளர். இதில் அமலாபால் படு கிளாமராக நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 19-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அமலா பால் உள்ளிட்ட படக்குழுவினர்கள் பங்கேற்ற இந்த விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் டிரைலரை வெளியிட, இளம் இயக்குநர்களான மித்ரன், ரவிக்குமார், லோகேஷ், ஸ்ரீகணேஷ், நிதிலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

இந்தப் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் ஆடையில்லாமல் நடித்துள்ளார் அமலாபால். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது கேமராமேன் மற்றும் லைட் மேன்கள் உள்ளிட்ட 15 பேர் மட்டுமே இருந்தனர்.‘பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால், எனக்கு இந்த 15 பேரும் கணவர்கள் போல இருந்து தேவையான பாதுகாப்பை அளித்தனர். அவர்கள் எனக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால் என்னால் அந்தக் காட்சியில் நடித்திருக்கவே முடியாது'' என படவிழாவில் மனம் திறந்து பேசினார் அமலாபால்.

News Counter: 
100
Loading...

Padhmanaban