close
முகப்புகாந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் பாலிவுட் நாயகன் பிறந்த தினம் இன்று 

காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் பாலிவுட் நாயகன் பிறந்த தினம் இன்று 

March 14, 2018 141Views
காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் பாலிவுட் நாயகன் பிறந்த தினம் இன்று 

அமீர்கான் முதன் முதலில் குழந்தை நச்சத்திரமாக  நசீர் ஹுசைன் தயாரித்த  யாடோன் கி பாரத்(Yaadon Ki Baaraat) படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் 1973-ம் ஆண்டு வெளியானது.அதன்பின் இவர் பதினொறு ஆண்டுகள் கழித்து 1984-ம் ஆண்டு ஹோலி படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். ஆனால் இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. 

அதன்பின் 1988-ம் ஆண்டு வெளியான குயாமத் சே குயாமத் டக்(Qayamat Se Qayamat Tak) படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இவரது மாமா  நசீர் ஹுசைனின் மகன் மன்சூர் கான் இயக்கி இருந்தார். இந்த படம்  வணிகரீதியாக வெற்றி பெற்று சாதனை படைத்தது, அதன் விளைவாக கான் திரைப்படத் துறையில் ஒரு முன்னணி நடிகரானார். 'சாக்லேட் ஹீரோ' மாதிரியான தோற்றம் கொண்டிருந்ததால் அவர் இளம் கனவு நட்சத்திரமாகக் கருதப்பட்டார்.

ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன் இவரது மாமா நசீர் ஹுசைனுடன் துணை இயக்குனராக பணியாற்றிவந்தார்.அதான் விலைவாக, இவரது சொந்த தயாரிப்பில் மூன்றாவது படமாக உருவான படம்தான் தாரே ஜமீன் பர்.

இவர் திரைத்துறை தண்டி சமூக சேவையும் செய்துவருகிறார்.இவர் முன்மாதிரியாக கருதுவது மகாத்மா காந்தியை தான், அதனால் தான் இவர் எப்போது அமைதியான முறையில் போராடவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.