ஆண்டிப்பட்டியில் ஓ.பி.எஸ். தலைமையேற்க கோரி போஸ்டர்..!

share on:
Classic

அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வேண்டுமென தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தனர். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுச்செயலாளர் பதவி குறித்து, தமிழகம் முழுவதும் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த போஸ்டர்களால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

News Counter: 
100
Loading...

Ragavan