‘அக்யூஸ்ட் நம்பர் 1’ படத்தின் டீசர் வெளியீடு..!!

share on:
Classic

சந்தானம் நடிப்பில் உருவான அக்யூஸ்ட் நெம்பர் 1 படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா நடிக்கிறார். இவர் '100% லவ்' என்ற தெலுங்கு படம் மற்றும் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியான நிலையில் இப்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan