போகிப்பண்டிகை : பிளாஸ்டிக், டயர் எரித்தால் கடும் நடவடிக்கை..

Classic

சென்னையில் போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட பொருட்களை எரிப்பவர்களை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மாசில்லா போகி என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்ட இந்தக் கருத்தரங்கை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிக்கர் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட இயற்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை எரித்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்வோர் மீது அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், சென்னையில் இதனை கண்காணிக்கு 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிக்கர் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind