சட்டவிரோத கடத்தலை தடுக்க நடவடிக்கை : எல்லைப் பகுதிகளில் வர்த்தகத்திற்கு தடை விதித்தது இந்தியா..!!

share on:
Classic

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் வர்த்தகத்திற்கு இன்று  முதல் தடைவிதிக்கப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தீவிரவாதிகளுக்கு நெருக்கமான சில நபர்கள் ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் வணிகம் மேற்கொள்வதாக தெரியவந்தது. பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள், போதை பொருட்கள் மற்றும் போலி ரூபாய நோட்டுகள் ஆகியவை எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்கள் நுழைவதாக தகவல் வெளியானதை அடுத்து எல்லைப் பகுதியில் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஜம்மு - காஷ்மீர் இடையிலான வர்த்தகத்திற்கு கடந்த 1-ம் தேதி தடைவிதிக்கப்பட்டது. 2 வாரங்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது. பிப்ரவரி 14-ல் புல்வாமா தாக்குதலில் இருந்தே இரு நாடுகளின் உறவுகளில் சிக்கல் நீடிக்கிறது.

News Counter: 
100
Loading...

Ramya