பணிக்கு திரும்பும் ஆசிரியர்களை மிரட்டினால் நடவடிக்கை..பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!

share on:
Classic

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களை ஜாக்டோ - ஜியோ சங்கத்தை சேர்ந்த யாரேனும் மிரட்டினால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம், காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில், பணிக்கும் திரும்பும் ஆசிரியர்களை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் யாரேனும் மிரட்டினால் அவர்கள் மீது முதன்மை கல்வி அலுவலர்களிடம் புகார் அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் பங்கேற்காமல் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind