துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார்..!

share on:
Classic

கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றுள்ளார்.

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த 28-ஆம் தேதி துவங்கி வரும் 2-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கோவை ரைபிள் கிளப், சென்னை ரைபிள் கிளப், உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜீத்குமார் கலந்து கொண்டுள்ளார். காவலர் பயிற்சி மையம் வந்த அவரை அங்கிருந்தவர்கள் தங்களது அலைபேசி மூலம் படம் எடுத்தனர். இதுகுறித்து வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan