’ பேட்ட ‘தலைவா தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க...துள்ளி குதிக்கும் தணுஷ்..!

share on:
Classic

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட படம் குறித்து நடிகரும், ரஜினியின் மருமகனுமாகிய தணுஷ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பேட்ட படம் இன்று உலகமெங்கும் வெளியாகி கெத்து காட்டிக்கொண்டிருக்கிறது.  இப்படத்தை பார்த்த ரசிகர்களும் ’ தலைவர் வேர லெவல்’, ’தலைவர் வழி எப்பவுமே தனி வழி ‘ ’மாஸ்-னா அது தலைவர் தான் ’ என தங்களது வாழ்த்துக்களை உணர்ச்சி பொங்க தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பேட்ட படம் குறித்து நடிகர் தனுஷ் ட்விட்டரில், பேட்ட ஒரு காவியம், லவ் யூ தலைவா தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. கார்த்திக் சுப்பராஜிக்கும், பேட்ட படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், அனிருத்-ன் மிகச்சிறந்த பிஜிஎம்  இது.  பேட்ட பராக் என ஆனந்தத்தில் துள்ளி குதித்து பதிவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind