பிளிப்கார்ட் நிறுவனத்திடம் ரூ.1.25 லட்சம் கோட்டைவிட்ட நடிகர் நகுல்..!

Classic

பிளிப்கார்ட்  நிறுவனத்திடம் ரூ.1.25 லட்சம் கோட்டைவிட்ட நடிகர் நகுல்..!                

 பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "பாய்ஸ்" படம் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் நகுல். பின்னர் நீண்ட நாட்கள் கழித்து தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றி "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் வளர்ந்துவரும் நடிகராக திகழ்ந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு சிறிது ஓய்வு கொடுத்து மீண்டும் என்ட்ரி ஆனா படம் "செய்". கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான இப்படம் மக்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இவர் தனது மூன்றாம் ஆண்டு திருமண பரிசாக தனது மனைவிக்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை கொடுக்க எண்ணி பிளிப்கார்ட் எனும் இளையதளம் மூலம் ஆர்டர் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அந்த ஐபோன் டெலிவெரி செய்யப்பட்டது. அவர் அப்போது வெளியூர் சென்றிருந்ததால் வந்த பொருளை பார்த்து வாங்கமுடியவில்லை, பின்னர் வீடு திரும்பிய நகுல் தான் ஆர்டர் செய்திருந்த ஐபோனை எடுத்து பார்த்தபொழுது அதில் போலியான போன் இருந்ததை கண்டு அதிர்ந்து பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்நிறுவனம் இப்பிரச்னையை தீர்க்காமல் நகுலை  அலைகழித்துள்ளனர் பொறுமை இழந்த நகுல் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார். இது இணைய தளங்களில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind