மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி செய்த அசத்தல்

share on:
Classic

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா- விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் முதலாவது திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்கிறார். மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனரான விசாகன் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.

 

இவர்களின் திருமணம் வரும் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

இதில் அரசியல் பிரபலங்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதை பைகளை வழங்கி ரஜினி அசத்தியுள்ளார்.

 

 

News Counter: 
100
Loading...

aravind