நடிகர் ஆர்.கே.வின் கின்னஸ் சாதனை முயற்சி..!

share on:
Classic

நடிகர் ஆர்.கே., ஒரே நேரத்தில் 1,005 பேருக்கு ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தச் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடுகிறார்.

எல்லாம் அவன் செயல், புலிவேஷம், வைகை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்தவர் ஆர்கே. இவர், இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக 'வீ கேர்' என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தலை முடிக்கு, 'டை' அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை தயாரித்துள்ளார். இதை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காக வரும் ஆகஸ்ட் 15-அம் தேதி ஒரே நேரத்தில் 1,005 பேரை திரட்டி, இந்த ஷாம்பூவை பயன்படுத்த செய்து, கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan