மத்திய அரசின் ஒப்புதலின்றி நடிகர் சஞ்சய் தத்திற்கு தண்டனை குறைப்பு..!!

share on:
Classic

மத்திய அரசின் அனுமதியில்லாமலேயே நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனை குறைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் 2016ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது தண்டனை காலத்திற்கு 8 மாதம் முன்னதாகவே மகாராஷ்ட்ரா அரசு அவரை விடுதலை செய்தது தெரியவந்துள்ளது. சிபிஐ விசாரித்த வழக்கில், மத்திய அரசின் ஆயுத சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்திற்கு தண்டனை குறைப்பு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பேரறிவாளன் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள எரவாடா சிறை நிர்வாக அதிகாரிகள், மத்திய அரசிடம் இருந்து எவ்வித ஒப்புதல் கடிதமும் பெறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கை மத்திய அரசு விசாரித்ததால் சட்டப்பிரிவு 435(1) ன் படி மத்திய அரசின் ஒப்புதல் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
 

News Counter: 
100
Loading...

Ramya