தேர்தலில் வாக்களித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று வளசரவாக்கம் குட்சஷெப்பர்ட் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வாக்களிக்க வந்த நிலையில் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர் சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியல் வரிசை எண் 703ல் சிவகார்த்திகேயன் பெயர் எழுதப்பட்டு பின்னர் வாக்களித்தார். நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால் இந்த சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan