அட்லீ படத்தில் தளபதியின் 'மாஸ்' பெயர் என்ன தெரியுமா...??

share on:
Classic

'அட்லீ' இயக்கத்தில் தளபதி 'விஜய்' நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் அவருடன் கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். 'வில்லு' படத்திற்கு பிறகு இந்த படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா'. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் விளையாட்டு பயிற்சியாளராக வருகிறார் என்று கூறப்படுகிறது. அதற்காக தன் உடலை வலிமைப்படுத்தும் வேளையில் இறங்கியுள்ளார் விஜய். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் 'மைக்கேல்' என்ற பெயரில் தான் மிரட்ட போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

News Counter: 
100
Loading...

youtube