நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்...

share on:
Classic

நகைச்சுவை நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள், மாரடைப்பால் இன்று காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். 86 வயதான அவரது தாயார் மணியம்மாள் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று இரவு அவரது, சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை 10.30 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan