வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்காமல் திரும்பிய நடிகர்..!!

share on:
Classic

வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததால் வாக்களிக்காமல் திரும்பிய நடிகர் ரமேஷ் கண்ணா அது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை சாலிகிராமம் கரியப்பா பள்ளியில் வாக்களிப்பதற்காக வந்தபோது தனது பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை என்று கூறியதால் திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ரமேஷ் கண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் “ காலை 6 மணிக்கு வாக்களிக்க பூத்திற்கு சென்றேன். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய பின் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று சொல்கிறார்கள். ஒரே வீட்டில் உள்ள மனைவிக்கு ஓட்டுள்ளது, ஆனால் எனக்கில்லை. பெயர் இல்லாதது யாருடைய தவறு என் தவறா..? வாக்காளர் அடையாள அட்டையை வைத்து ஓட்டுப்போட வேண்டிய உரிமை தரவேண்டும். என் ஓட்டு இன்று வீணானது. இதற்கு அரசாங்கம் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். சினிமாக்காரர்களுக்கு மட்டும் ஓட்டு போடுவேன் என்று என் ஓட்டை நீக்கிவிட்டார்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது” என்று வீடியோவில் பேசியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya