திரைத்துறையில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள பாய்ஸ் நாயகி!

share on:
Classic

பிரபல நடிகை ஜெனிலியா தனது திருமணத்திற்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் ரீ எண்ட்ரி ஆகிறார். 

சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான ஜெனிலியா, விஜய் நடித்த சச்சின் மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

திரைத்துறையை விட்டு விலகியிருந்த அவர் தற்போது ரீ எண்ட்ரி ஆகிறார். தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள 'மாவுலி' என்ற படத்தில்  ஒரு பாடலில் நடித்துள்ளார். ஏற்கெனவே அவருடன் மஸ்தி, துஜே மேரி கசம், லாய் பாரி உள்ளிட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind