மீண்டும் தமிழில் களமிறங்கும் நடிகை மதுபாலா..

share on:
Classic

நடிகை மதுபாலா அக்னி தேவ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. அழகன் என்ற படத்தின் மூலம் நடிகையாகா அறிமுகமானார். 

இப்படத்தைத் தொடர்ந்து ரோஜா படத்தில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றதோடு, தமிழ்நாடு மாநில அரசு விருதும் பெற்றார். இந்த நிலையில், தற்போது அக்னி தேவ் படத்தில் அமைச்சராக நடித்து வருகிறார். இப்படத்தில், சகுந்தலா தேவியாக வரும் மதுபாலா, ஹீரோவாக நடிக்கும் பாபி சிம்ஹாவிற்கு வில்லியாக நடித்து வருகிறாராம். மேலும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசன் இப்படத்தில் பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். 

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. சென்னையில் ஒரு நாள் 2 படத்தின் இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். ஜேக்ஸ் பெஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சியாண்டோ ஸ்டுடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது. 

 

News Counter: 
100
Loading...

aravind